தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கலவி பயிலும் வாயப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை அதனை சரிசெய்வதறகான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்யவும்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தரவும் , அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராயந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஒய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.