தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து  பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. அதில், 60% பேர் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்தனர்.

இதன் அடிப்படையிலேயே  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 13 கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்தன . பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

 பெரும்பாலான கட்சி பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளின் கருத்துக்கள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இதனிடையே, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. பெரும்பாலானோர் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்யாமல் செப்டம்பரில் தேர்வை நடத்த அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கருத்துக் கேட்பு முடிவுகளின் அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளார். அதன் பிறகு, பொதுத் தேர்வு குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டும்.