கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ விளக்கம் அளித்துள்ளது.


அதன்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களது 10 மற்றும் 11ம் வகுப்புகளில் இருக்கும் 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் டூ யூனிட் தேர்வுகள், பருவ தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. அவ்வகையில்10ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பாடங்களில் தலா 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். 12-ஆம் வகுப்பு பாடங்களில் 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.










இந்த நடைமுறைகள் முடிந்ததும், தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின் மூலம் கிடைத்த மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு நேரடியாக தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.