பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான தேர்வுமுடிவுகள் இன்று தமிழக் பள்ளிகல்வி துறையால் வெளிடப்பட்ட நிலையில் கல்லூரி களில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16 , 473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இணையம் வழியாக 22.07.2021 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளாம் என பள்ளிகல்விதுறை வித்துதெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதன்படி பொறியியல், கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு வரும் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 24ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி தேதி எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..