Lab Asst Incentives -DSC proceeding


ஆய்வக உதவியாளர்களுக்கு உயர்கல்வித் தகுதிக்கான இரு ஊக்க ஊதிய உயர்வு கோருவது பொருந்தாது என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)  தெரிவித்துள்ளார் .

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் திரு.P.சரவணகாந்தி என்பர் உயர்கல்வித் தகுதிக்கான இரு ஊக்க ஊதிய உயர்வு  தொடர்பாக கோரிக்கை மனு தமிழ்நாடு பள்ளிகல்வி துறைக்கு அனுப்பியுள்ளார்

அவரது மனுக்கள் மூலம் ஆய்வக உதவியாளர்களால் கோரப்பட்டுள்ள உயர்க்கல்வித் தகுதிக்கான இரு  ஊதிய உயர்வுகள் அரசாணை (நிலை) எண்.116, பணியாளர் மற்றும் நிருவாக சீர்த்திருத்தத்துறை, நாள் 15.10.2020-ன்படி ஏற்க இயலாது என்பதுடன் அளிக்கப்பட்ட அரசாணை தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து துறைகளின் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)  தெரிவித்துள்ளார்