10Th Provisional Mark Sheet Download Link




2020-21 ஆம் கல்வியாண்டில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  (provisional mark sheet)அரசு தேர்வு இயக்ககம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது


கொரானா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது 10 ஆம்  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக   தமிழக அரசு அறிவித்தது . 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழானது   அவர்கள் பயின்ற பத்தாம் வகுப்பு ,பதினோராம் வகுப்பு எழுத்து தேர்வு மதிப்பெண்கள்  மற்றும் பனிரெண்டாம் வகுப்பு  செய்முறை/அகமதிப்பீடு மதிப்பெண் அடிப்படையில் கணக்கீட்டு மதிப்பெண் பட்டியல்  வழங்கப்பட்டது. 


10ஆம்  வகுப்பு மாணவர்களை பொருத்தவரையில் அவர்கள் பதினோராம் வகுப்பு சேர்வதற்கும் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்வதற்கும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது மேலும் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது


தற்போது 10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வு இயக்ககம் அதன் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக  கடந்த 21.08.2021  தேதி அவர்களின் கைபேசி எண்ணுக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை  குறுஞ்செய்தி வழியாக அரசு தேர்வு இயக்ககம் அனுப்பியுள்ளது.


10Th Provisional Mark Sheet Download Link

👆👆Provisional Certificate will be available from 23.08.2021 at 11:00 a.m onwards


👆👆மாணவர்கள் மேற்கண்ட  இணைய தளத்திற்கு சென்று தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.