தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் - தமிழக அரசு.


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிகல்வி அமைச்சர் , கல்வி அதிகாரிகள்மற்றும்  முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் எடுக் பட்ட முடிவுகள் அடிப்படையில் பள்ளிகள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டுதல் வழிமுறைகளை பின்பற்றி திறக்கப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது 


1 -9- 2021 முதல்‌ பள்ளிகளில்‌ 9, 1, 1 மற்றும்‌ 12- ஆம்‌ வகுப்புகள்‌ சுழற்சி முறையில்‌, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, செயல்படும்‌. இப்பள்ளிகளில்‌ மதிய உணவுத்‌ திட்டமும்‌ உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌. மேற்படி உயர்‌ வகுப்புகள்‌ செயல்படுவதை கவனித்து அதன்‌ அடிப்படையில்‌ மழலையர்‌ வகுப்புகள்‌, 1 முதல்‌ 8 வரை உள்ள வகுப்புகளை 15- 9- 2021 க்குப்‌ பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்‌ .


கொரோனா பரவல் அதிகரிதத்தன்  காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல்  9  முதல்  12-ஆம் வகுப்பு வரை நடைபெற்று வந்த பள்ளிகள் மூடப்பட்டன.  அதனை தொடர்ந்து பொது தேர்வு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது 

TN GOV PRESS NEWS  21.08.2021

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் படிப்பதற்க்கு  வசதியாக பத்தாம் வகுப்பு ,பதினொன்றாம் வகுப்பு எழுத்துத் தேர்வு மதிப்பெண், பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு/ அகமதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு தற்போது மாணவர்கள் கல்லூரியில் சேர தொடங்கியுள்ளனர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி  சான்றிதழில்  அச்சிடபட்டு  தற்காலிக சான்றிதழ் அளித்து வரும் 23 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது


ஒவ்வொரு ஆண்டும் பள்ளியானது ஜூன் 1-ஆம் தேதியன்று திறக்கப்படும் ஆனால் 2021 -22 ஆம்  கல்வியண்டு ஆனது கொராண பரவல் காரணமாக திறக்கப்பட்டாத நிலையில் உள்ளது .


தற்போது கொரானா பரவல்  குறைந்துள்ள நிலையில்  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பதற்கான  நிலையான வழிகாட்டுதல் வழிமுறையை மக்கள் மற்றும் நல்வாழ்வு துறைகள் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது .


அதில் 50 சதவீதமானவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகளை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


மேலும் பள்ளி திறப்பதற்கு ஆயத்தமாக சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டுகள் பின்பற்ற வேண்டிய குறைக்கப்பட்ட  பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் தமிழக் அரசு வெளியிட்டுள்ளது , மாணவர்களுக்கு மாதாமாதம் வழங்கவேண்டிய ஒப்படைப்பு மாதிரிகள்  வெளியிட்டுள்ளது.


9ஆம் வகுப்பு முதல்12 ஆம்  வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி திறக்கப்பட்டால் அவர்களின் ஆர்வம் செலுத்தும் விதமாக புத்தாக்க பயிற்சி கட்டகம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது 

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் - தமிழக அரசு.

மேலும் அனைத்து கல்லூரிகளும்‌ 01.09.2021 முதல்‌ சுழற்சி முறையில்‌ வகுப்புகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின்‌ செயலாளர்கள்‌ வழங்குவார்கள்‌. கல்லூரிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.

அனைத்து பட்டயப்‌ படிப்பு வகுப்புகள்‌ (Diploma Courses,) சுழற்சி முறையில்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌. என தமிழக் செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது