ஒப்படைவுகள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள் 

மாணவர்களும் கற்றலில்  தொய்வு ஏற்பாடத வகையிலும் கற்றல் வளங்களை ஒருங்கிணைத்து கற்றல்  நெறிப்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பீடு செய்யவும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களின் அறிவுரைப்படி அணைத்துவகுப்புகளுக்கும்  (1 – 12) அணைத்து பாடங்களுக்கும் அலகு வாரியாக மாணவர்கள் சமர்ப்டிக்கப்பட வேண்டிய ஜூன் , ஜுலை மாதத்திற்கான ஒப்படைவுத் தொகுப்பு அணுப்பி வைக்கபட்டது 

அந்த ஒப்படைப்புகளை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் மதிப்பீடுதல் தொடர்பாண அறிவுரைகளை பள்ளி கல்வி செயலர் சுற்றறிகை மூலம் அனுப்பியுள்ளார்.

CSE - Assignment to Students proceeding

ஒப்படைவுகள் (assignments) அந்தந்த மாதத்திற்குரிய பாடங்களுக்கான பாடப்பொருள் சார்ந்து தயாரிக்கப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கொண்ட Whats app குழுவினை CEOs மற்றும் DEOs அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கொண்ட Whats App குழுவினை BEO-ம் உருவாக்கி உள்ளதை உறுதிப்படுத்தவேண்டும்.

.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரித்து அனுப்பப்பட்ட அலகு வாரியான ஒப்படைவுகளை  இந்த Whats app குழுக்கு ஆய்வு அலுவர்கள் தலைமையாசிரியர்களுக்கு பகிரவேண்டும்.

தலைமையாசிரியர்கள் இவற்றை தங்கள் பள்ளி ஆசிரியர் குழுவுக்கு பகிர்ந்து ,சம்மந்தப்பட்ட வகுப்பாசிரியர்கள் அவர்களுடைய வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஒப்படைப்பு அனுப்பவேண்டும்

வகுப்பாசிரியர்கள் மாதந்தோறும் அனுப்பப்பட்ட ஒப்படைப்புகளை வினாக்களுக்கு விடைகளை மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகத்தை பார்த்து அவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களில் எழுதி அவற்றை வாட்ஸ்அப் மூலம் தங்கள் வகுப்பாசிரியர் அனுப்ப வேண்டு

ஆசிரியர்கள் அனைத்து பாடங்களுக்கான ஒப்படைப்பு களையும் ஒரே நேரத்தில் செய்ய மாணவர்களை நிர்ப்பந்திக்காமல்  பாடங்களை வாரம் வாரியாக பிரித்து மாணவர்கள் எழுத வேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களின் ஒப்படைப்பு களை ஆய்வு செய்து எந்தப் பகுதியில் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறதோ அந்த பகுதிகளில் முக்கியத்துவம் கொடுத்து அதற்குரிய தெளிவான விளக்கத்தினை காணொளிகள் பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பவேண்டும்

தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை மதிப்பீடு செய்வதை சம்பந்தப்பட்ட பதிவுகளையும் ஒப்படைப்பு களையும் ஆய்வு செய்து உறுதி படுத்த வேண்டும் என சுற்றறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது