TET Certificate  Lifetime validity - Go

(TET )ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!


School Education Extension of validity period of Teacher Eligibility Test Certificate -Orders- Issued. School Education (TRB)Department G.O (Ms) No.128 Dated 23.08.2021

The Government, after careful examination, accept the proposal of Chairman, Teachers Recruitment Board and issue the following orders

1.The validity period of TET certificate for appointment unless otherwise notified by the Government would remain valid for life"

2.This order is applicable to the TET Certificate already issued by the Teachers Recruitment Board.


TET LifeTime validity - Go No.128 Dated 23.08.2021


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் (TET certificate lifetime validity)செல்லத்தக்கது எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி(RTE-2009)    மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியாராக பணியாற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அரசு பள்ளிகளில் ஆசிரியராக 1 முதல் 10 வகுப்பு வரை பணியாற்ற மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) 2 தாள்களைக் கொண்டது. இடைநிலை ஆசிரியராக பணியில் சேர முதல் தாளிலும், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர 2ம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்ற விதி நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஆயுள் முழுவதும்( tet certificate validity) செல்லுபடியாகும் என மத்திய கல்வி அமைச்சகம்  ஜுன் 3 அறிவித்ததது. தமிழகத்திலும் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோருக்கு பணி   செய்யப்படவில்லை. அவர்கள் தங்கள் சான்றிதழ்களை நீட்டிக்க வேண்டும் என   தேர்வில் தேர்ச்சி பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு(TET certificate lifetime validity)  மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க வகையில்   அரசாணை வெளியிட்டுள்ளது அதன் படி  , ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012, 2013, 2014, 2017 மற்றும் 2019ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றவர்களுக்கும் இது பொருந்தும் எனவும்  அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.