BT Teacher Fixation As on 01.08.2021

01.08.2021 நிலவரப்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 

ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் 01.08 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப் செய்வது நடைமுறையில் உள்ளது 

அதன் அடிப்படையிலேயே இந்த கல்வி ஆண்டிற்கான நகராட்சி மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08 2021 இன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்வது சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

BT Teacher Fixation As on 01.08.2021 Proceeding 

அதன்படி அனைத்து அரசு / நகராட்சி //அரசு மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரங்கள் சரியாக EMIS யில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் 

ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிட விபரங்களை Scale Register  அடிப்படையில் சரிபார்த்து பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் 

அனைத்து ஆசிரிய முழு விபரங்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்