அரசு ஊழியர்‌ நலன்‌

TN Budget  In Tamil Pdf 

இரண்டிற்கும்‌ குறைவான குழந்தைகள்‌ உள்ள மகளிர்‌ அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்‌என்ற தேர்தல்‌ அறிக்கையின்‌ வாக்குறுதியை, 1.7.2021முதல்‌ செயல்படுத்தப்படும்‌.


பணியிலிருக்கும்போது உயிரிழக்கும்‌ அரசுப்‌ பணியாளரின்‌ குடும்பத்தினருக்கு, குடும்பப்‌ பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும்‌ உதவி மானியம்‌ 3 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 5 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌.


அரசு ஊழியர்களுக்கும்‌, ஓய்வூதியதாரர்களுக்கும்‌ உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல்‌ வழங்கப்படும்‌.