ICT Training  For  II Batch from 23rd to 28th


2021-22 ஆம்  கல்வியாண்டில் 12500 அரசு  பள்ளி முதுகலைஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, Hi Tech Lab மற்றும்  ICTஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டம் பயிற்சி 76804 முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23,8.2021 முதல் 27.8.2021 வரை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளியில் 20 கணினி இணைப்புகளும் (Thin Clients) உயர்நிலைப்பள்ளிகளில் 10 கணினி இணைப்புகளும் உள்ளன, எனவே ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் 18 ஆசிரியர்களும் உயர்நிலைப்பள்ளிகளில் 8 ஆசிரியர்களும் பங்கு கொள்ளத்தக்க வகையில் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. 

 Basic ICT Training   II Batch  from 23rd to 28th  Proceeding Date :18.8.2021

பயிற்சிக்கான கால அட்டவணை ( நாள் 1 முதல் நாள் 5 வரை)

09:00 am-10:00am-- Attendance in exams.tnschools.gov.in/login

10:00 am - 10:30am --Welcome & Briefing (through Central YouTube channel) 

10:30am - 1.00 pm-- Video based self learning & hands on training (By District Resource person through YouTube channel)

1.00pm-02:00pm --Lunch  

02:00 pm - 02:45 pm  Doubt clearing session (through Central YouTube channel) 

02:45 pm - 03:00 pm- Login for assessments

03:00 pm 03:30 pm -Assessments in exams.tnschools.gov.in/login 

03:30 pm -04:00 pm  -Submission of assessments


ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

Update Your  TN EMIS App v.0.0.45

ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க EMIS  ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும், அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு

Android கைப்பேசியில் TN EMIS APP யினை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.


TN EMIS App -Teacher ID (8 digit)  ,  password பயன்படுத்தி Login செய்ய வேண்டும்.  PASSSWORD IN EMIS யில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல்நான்குஇலக்கு @ பிறந்த வருடம். (9999@1900)

 Login செய்து  click Teacher Training Module




Select training யினை click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக்கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை (ICT TRAINING ) தெரிவு  செய்ய வேண்டும்.

பின்பு பயிற்சி மையத்தினை (Training Venue) Click செய்யவும். ஒன்றியத்திலுள்ள  அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள (HIGH TECH LAB) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும். அதில் பயிற்சியில் கலந்துக்கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியினை SELECT செய்து submit/save செய்ய வேண்டும். தங்கள் பள்ளி பயிற்சி மையமாக இல்லை எனில் அருகிலுள்ள பள்ளியின் பெயரை தெரிவு(select) செய்து  Submit /  Save  செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்து  Submit /  Save   செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக்கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில்  Registered Successfully என காண்பிக்கப்படும்

இவ்வாறு ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையங்களை தெரிவு செய்து வரும் பொழுது அம்மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வரும்.

எனவே ஆசிரியர்கள் login செய்யும் பொழுது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியாக இருக்கும் பயிற்சி மையங்களின் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும்.