Basic Quiz For  10Th Std  

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்!!!

SCERT  Basic Quiz Exam Proceeding Date :15.9.2021

அரசு உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல்  இடைவெளியை குறைக்கவும், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படி, 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் HI Tech Lab மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில் Basic Quiz Exam நடைபெரும்


Basic Quiz Exam யில் கேட்க்கப்படும் வினாக்கள் விபரம் 

தமிழ்மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஒரு Reading Comprehension  சார்ந்து 5 பலவுள் தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த பலவுள் தெரிவு வினாக்களும்   கேட்க்கப்படும்  கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில்  ஒவ்வொரு பாடத்திலிருந்து 10 பலவுள் தெரிவு வினாக்களும்  கேட்கப்படும்.

  • தமிழ் –10  பலவுள் தெரிவு வினாக்கள் 
  • ஆங்கிலம் -10 பலவுள் தெரிவு வினாக்கள்
  • கணிதம்-10 பலவுள் தெரிவு வினாக்கள்
  • அறிவியல் -10 பலவுள் தெரிவு வினாக்கள்
  • சமூக அறிவியல் -10 பலவுள் தெரிவு வினாக்கள்

 மொத்தம் =50 பலவுள் தெரிவு வினாக்கள்

  • தேர்வு  வினாத்தாள் live ஆகும் நேரம்  காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை 
  • ஒருமாணவர்களுக்கான தேர்வு நேரம்-90 நிமிடம் 

Basic Quiz தேர்வு நடத்தப்படும் URL Link 


இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு Password மாணவர்களின் EMIS  ID-ல் கடைசி நான்கு இலக்கம்@ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும். 

URL -http://exams.tnschools.gov.in/

Example 

Login ID : 3390xxxx0400018 (Student EMIS ID )

PWD : 0018@2006  (EMIS ID last 4 Digit @Birth Year)


Basic Quiz Exam  தொடர்பான வழிகாட்டுதல்கள்:

1. மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி / Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை தேர்வில் ஈடுபடுத்த வேண்டும். தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

4. ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

5. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து வினாத்தாள்  live  ஆக இருக்கும்..

6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் live   ஆக இருப்பதால், ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 90 நிமிடத்திற்குள் முடிக்கும் படியாக இருத்தல் வேண்டும்.

7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in, Online refresh செய்தல் போன்ற  Technical  உதவி மட்டுமே செய்ய வேண்டும். வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக் கூடாது.

8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள்

  • Hi-Tech Lab,
  • மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட  மடி கணினிகள்
  • ஆசிரியர்களின்  மடி கணினிகள்
  • மேல்நிலைப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடி கணினிகள்

9.இச்செயல்பாட்டினை சனிக்கிழமையன்று முடிக்க இயலாத நிலையில் அடுத்து வரும் செவ்வாய்கிழிமையன்றும் நடத்தி முடிக்க வேண்டும்.

10.இத்தேர்வு முடிந்தவுடன் அடுத்த பள்ளி வேலை நாளில் நடந்து முடிந்த Basic Quiz- வினா விடைகள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

11.சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் Basic Quiz- விடைகளை மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும்.