How to use Refresher course -clarification

பள்ளிக் கல்வி - புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு


கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணர்வகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 2-12 வகுப்புகள் வரை முந்தைய வகுப்பிற்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளை  உள்ளடக்கி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு Soft copy அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.


Refresher Course- CSE - Proceeding  Pdf 


☀☀ 9,10 வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக்கருத்துக்கள் முதலில் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (Basic and Critical Concepts) கொடுக்கப்பட்டிருக்கும்.

☀☀ அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக்கருத்துகள் (Basic and Critical Concepts) மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.

☀☀ மிக அடிப்படையான பாடக்கருத்துகளில் கற்றல் அடைவு போதிய அளவு மாணவர்கள் பெற்றிருப்பின், அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளைக் கற்பிக்கலாம்.

☀☀ ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளியில் ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனர் என்பதையும், மாணவர்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆசிரியர் உதவியுடன் ஆய்வு  செய்து, அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் 

☀☀ சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளை 45 — 50 நாட்களுக்குள் கற்பிக்க வேண்டும் 

☀☀ ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் கற்றல் அடைவின் நிலைக்கு ஏற்ப, முறையாகத் திட்டமிட்டு, புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளைக் கற்பிக்கப் வேண்டும் என பள்ளி கல்வி  ஆணையர் தெரிவித்துள்ளார்.