அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள்  


1) அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து, நிதிநிலை அறிக்கையில்‌ 1-4-2022 முதல்‌ அமல்படுத்தப்படும்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள்‌ சங்கங்களின்‌ கோரிக்கையினைக்‌ கனிவுடன்‌ பரிசீலித்து, இந்த அரசுக்குக்‌ கடும்‌ நெருக்கடியான நிதிச்‌ சூழல்‌ இருப்பினும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களின்‌ நலனைக்‌ கருத்தில்கொண்டு, அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே, அதாவது, 1-1-2022 முதல்‌, அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்ள விரும்புகிறேன்‌. இதன்மூலம்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்கள்‌ பயன்பெறுவார்கள்‌. இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே, அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால்‌, மூன்று மாத காலத்திற்குக்‌ கூடுதலாக ஆயிரத்து 620 கோடி ரூபாய்‌ செலவினம்‌ ஏற்படும்‌. ஆண்டொன்றுக்கு கூடுதலாக 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய்‌ செலவாகும்‌.

●அரசுப்‌ பணியாளர்கள்‌ தங்கள்‌ பணிக்‌ காலத்தில்‌ பெற்றிடும்‌ கூடுதல்‌ கல்வித்‌ தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆம்‌ ஆண்டு இரத்து செய்யப்பட்டது. அரசுப்‌ பணியாளர்கள்‌ பெற்றிடும்‌ கூடுதல்‌ கல்வித்‌ தகுதியின்மூலம்‌ அவர்களுடைய பணித்திறன்‌ மற்றும்‌ அவர்களது செயல்பாடுகள்‌ மேம்படுவதை ஊக்குவிக்கும்‌ பொருட்டு, உயர்‌ கல்வித்‌ தகுதிகளுக்கான ஊக்கத்‌ தொகை, ஒன்றிய அரசால்‌ அண்மையில்‌ அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின்‌ அடிப்படையில்‌ விரைவில்‌ அறிவிக்கப்படும்‌.

●அரசுப்‌ பள்ளிகளில்‌ காலியாகவுள்ள இளநிலை உதவியாளர்‌ பணியிடங்கள்‌, தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலமாக நிரப்ப விரைவில்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

●ஓய்வுபெறும்‌ நாளில்‌ அரசுப்‌ பணியாளர்கள்‌ தற்காலிக பணிநீ்க்கத்தில்‌ வைக்கும்‌ நடைமுறை தவிர்க்கப்படும்‌.

●2016, 2017 மற்றும்‌ 2019 ஆகிய ஆண்டுகளில்‌ முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்‌ நடத்திய வேலைநிறுத்தப்‌ போராட்டங்கள்‌ தொடர்பாக, பல்வேறு சங்கங்கள்‌ தங்கள்‌ வேலைநிறுத்தக்‌ காலம்‌ மற்றும்‌ தற்காலிகப்‌ பணி நீக்கக்‌ காலத்தினைப்‌ பணிக்‌ காலமாக முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள்‌. இதனைப்‌ பரிவுடன்‌ பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலைநிறுத்தக்‌ காலம்‌ மற்றும்‌ தற்காலிகப்‌ பணிந்க்க காலம்‌ ஆகியவை பணிக்‌ காலமாக முறைப்படுத்தப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌

110 Allowancement 

●வேலைநிறுத்தப்‌ போராட்டத்தின்போது பணியிட மாற்றம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில்‌ மீண்டும்‌ பணியமர்த்தும்‌ வகையில்‌, ) கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரியமுன்னுரிமை வழங்கப்படும்‌. மேலும்‌, போராட்டக்‌ காலத்தில்‌ அவர்கள்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்‌ கைவிடப்படும்‌. அந்த ஒழுங்கு நடவடிக்கையின்‌ காரணமாக பதவி உயர்வு ஏதேனும்‌ பாதிக்கப்பட்டிருந்தால்‌, அவையும்‌சரிசெய்யப்படும்‌.

●பணியில்‌ இருக்கும்போது காலமான அரசுப்‌ பணியாளர்களின்‌ வாரிசுதாரர்கள்‌ கருணை அடிப்படையில்‌ அரசுப்‌ பணி பெறுவதில்‌ உள்ள நடைமுறைச்‌ சிக்கல்களை நீக்கும்‌ வகையிலும்‌, கருணை அடிப்படையிலான நியமனங்கள்‌ குறித்து தற்போது நடைமுறையில்‌ உள்ள தெளிவின்மையினைச்‌ சரிசெய்யும்‌ வகையிலும்‌ உரிய வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்படும்‌.

●அரசுப்‌ பணியாளர்களுக்கான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ அரசு ஊழியர்களைச்‌ சார்ந்து வாழும்‌ மகன்கள்‌ மற்றும்‌ மகள்கள்‌ ஆகியோரை அவர்களது வயது வரம்பினைக்‌ கருத்தில்‌ கொள்ளாமல்‌ இத்திட்டத்தின்கீழ்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆணைகள்‌ பிறப்பிக்கப்படும்‌. மேலும்‌, அரசு ஊழியர்கள்‌ இத்திட்டத்தின்கீழ்‌ இடர்பாடுகள்‌ எதுவுமின்றி பயன்பெற ஏதுவாக, அவர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ ஒருங்கிணைந்தத்‌ தனி தொலைபேசி உதவி மையம்‌ ஒன்று அமைக்கப்படும்‌.

●புதியதாக அரசுப்‌ பணியில்‌ சேரும்‌ அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வு பெறும்‌ பணியாளர்களுக்கு, பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌. இதன்மூலம்‌ பவானிசாகர்‌ சென்று பயிற்சி பெறும்‌ நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள்‌ உரிய காலத்தில்‌ தங்களுக்குரிய தகுதிகாண்‌ பருவம்‌ முடித்தல்‌ மற்றும்‌ பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்‌.

●அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சார தேவைக்கேற்ப, ஆசிரியர்‌ பணி நியமனம்‌ மேற்கொள்ளப்படும்‌.