கனமழை காரணமாக பள்ளிகளுக்கு  இன்று (29.10.2021)விடுமுறை -7மாவட்டம் 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் என்றும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்தது.

அதனை அடுத்து நேற்றிரவு முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்ட மாவட்டங்கள் விபரம் 

  1. நெல்லை, 
  2. தூத்துக்குடி,
  3. நாகை, 
  4. மயிலாடுதுறை, 
  5. தஞ்சாவூர், 
  6. திருவாரூர்,
  7. திருச்சி

அதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை  புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது