Minority Scholarship  Fresh Application / Renewal

சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய விரிவான விபரங்கள் 

சிறுபான்மை சமூகத்தினரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரமத மந்திரி அவர்களின் புதிய 15 அம்ச திட்டம் ஜுன் 2006-ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நல் மதிப்பெண் பெற்ற சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பிற்காக கல்வி உதவித்தொகை வழங்க 29.01.2007 அன்று பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குதல் திட்டம் துவங்கப்பட்டது.


சிறுபான்மை சமுதாயத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ/மாணவியர்கள் உயர்கல்வி கற்கவும் அதன் மூலம் நல்ல பணியில் சேரவும் வாய்ப்பு ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.


Pre- Matric  பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை   

  •  1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை

Post Matric  -பள்ளி மேற்படிப்பு கல்வி தொகை  

  1. School Level – XI ,XII And Vocational Course of XI And XII Level 
  2. College Level : ITI/ITC, NCVT, Polytechnic, Diploma in Nursing, Teacher Training, UG / PG/
  3. (Other than Professional courses covered in MCM scholarship)தகுதி மற்றும் வருவாய்   அடிப்படையிலான கல்வி  உதவித் தொகை Professional / Medical Courses  (BE/ B.Tch, MBBC, etc.)





🔘பாரதப்பிரதமரின்  புதிய 15 அம்சத்திட்டத்தினகீழ் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

🔘100 % கல்வி உதவித்தொகை மைய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  கல்வி உதவித்தொகையானது சம்பளக்கணக்கு அலுவலர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், புதுதில்லி முலம் பொதுநிதி மேலாணமை முறை (PFMS - PUBLIC FINANCIAL MANAGEMENT SYSTEM) DBT (Direct Benefite Tranfer) முலம் நேரடியாக
மாணவ/மாணவிகளின வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.

🔘கல்வி உதவித்தொகை புதியது (Fresh) நிதி ஒதுக்கீடு இலக்கு 2011ஆம் ஆணடுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின அடிப்படையில பகிர்ந்தளிக்கப்படும். புதுப்பித்தலுக்கு இலக்கீடு ஏதும் இல்லை.

🔘வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

🔘30% கல்வி உதவித்தொகை மாணவியருக்காக ஒதுக்கீடு செய்யப்படும். போதுமான (ம )தகுதியான மாணவிகள் இல்லாத பட்சத்தில் மாணவர்களுக்கு அத்தொகை ஒதுக்கீடு செய்யப்படும்.

தகுதிகள் 

🔘இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கபட்டுள்ள இஸ்லாமியர்,கிறித்துவர்,சீக்கியர்,புத்தமதத்தினர்,பார்சி மற்றும் ஜைன மத்தை சார்ந்த அரசு , அரசு உதவி பெறும் மற்றும் இந்திய /மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவியராக இருத்தல் வேண்டும்.

🔘தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும் 

🔘மதிப்பெண்( சென்ற ஆண்டு இறுதி தேர்வில் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்,இருப்பினும் கொரானா பேரிடர் காலமாக கருத்தில் கொண்டு மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ள பட மாட்டாது)

குடும்ப ஆண்டு வருமானம் 

  • பள்ளி படிப்பு -1.00 லட்சத்திற்குள் 
  • பள்ளி மேற்படிப்பு -2.00 லட்சத்திற்குள்
  • தகுதி (ம்) வருவாய் – 2.50 லட்சத்திற்குள்

🔘கல்வி உதவி தொகை விண்ணப்பிக்கும் மாணவ/மாணவிகள் பள்ளியில் இடைநிற்றல் இருப்பின் தகுதியில்லை .போதுமான வருகைப்பதிவேடு இருத்தல் அவசியம்.

🔘BC/MBC/AdiDravidar Welfare, Education Departments, any other Boards ஆகிய துறையின் கீழ் கல்வி உதவி தொகை பெற்றிருப்பின் இக்கல்வி உதவி தொகை பொருந்தாது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் மாணவ/மாணவிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் 


🔘மாணவ /மாணவிகள்  www.scholarships.gov.in  என்ற தேசிய கல்வி உதவி தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்துடன் தொடர்புடைய ஆவணங்களை கல்வி நிறுவனத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

மாணவ மாணவிகள் விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் 


1. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரப் பெற்ற விண்ணப்பம்
         (Online Application) 
2. புகைப்படம் 
3. சென்ற ஆண்டுக்குரிய மதிப்பெண் சான்று
4. மாணவ/மாணவிகளின் பெயரிலுள்ள வங்கி கணக்கு புத்தக  நகல் 
5. ஆதார் நகல் 
6. படிப்பு சான்று (Bonafide Certificate – from Student login)
7. கல்வி கட்டண சான்று நகல் - (Fees Receipt)
8. இருப்பிடச் சான்று (குடும்ப அட்டை நகல்)
9. வருமானச் சான்று 
10. மத /சாதி சான்று 


🔘 கல்வி நிலையங்கள் மேற்கண்ட ஆவணங்களை பெற்று பின்னர்
Institute Login இல் விண்ணப்பங்களை சரிபாக்க வேண்டும்.
ஏதேனும் போலி விண்ணப்பங்கள் கல்வி நிலையத்தால் பரிந்துரை செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டால் சிறுபான்மையின நல  அமைச்சகத்தினால் நேரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 🔘 எனவே, 100% விண்ணப்பங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து பின்னர் பரிந்துரை செய்யுமாறு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


கல்வி நிலையத்தால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபர்னமையின நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

தலைமையாசியர்கள் /முதல்வர்களின் கடிதத்துடன் கீழ்கண்ட ஆவணங்களை இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.

1.மாணவ/மாணவியர்களின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தின் நகல் 
2.கல்வி நிலையத்தால் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டதற்கான கல்வி நிலைய முதல்வர் மற்றும்  ஒருங்கிணைப்பு அலுவலரின்nகையொப்பத்துடன் .