ITI Certificate Equivalence to 10Th Std And 12 Std  


ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு!!!

 ITI Certificate Equivalence to 10Th Std And 12 Std  GO No 34 Date 30.03.2022 Download 


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி முடித்துச்‌ செல்லும்‌ திறன்‌ பெற்ற பயிற்சியாளர்கள்‌ மேற்படிப்பினை தொடரும்‌ பொருட்டு 10-ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள்‌ தேவைப்படுகிறது. இத்தேவையினை பூர்த்தி செய்திடும்‌ வகையில்‌ இனிவரும்‌ காலங்களில்‌ 8-ஆம்‌ வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ இரண்டு ஆண்டுகள்‌ தொழிற்பிரிவில்‌ தேசிய தொழிற்சான்றிதழ்‌ பெற்றவர்களுக்கும்‌, 8 ஆம்‌ வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஓராண்டு தொழிற்‌ பிரிவில்‌ தேசிய தொழிற்சான்றிதழும்‌ மற்றும்‌ ஒராண்டு தேசிய தொழிற்பழகுநர்‌ சான்றிதழும்‌ ஒருங்கே பெற்றவர்களுக்கும்‌ 10-ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌, 10-ஆம்‌ வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ இரண்டு ஆண்டுகள்‌ தொழிற்பிரிவில்‌ தேசிய தொழிற்சான்றிதழ்‌ பெற்றவர்களுக்கும்‌, 10-ஆம்‌ வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சியினை ஓராண்டு  தொழிற்பிரிவில்‌ தேசிய தொழிற்சான்றிதழும்‌ ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர்‌ சான்றிதழும்‌ ஒருங்கே பெற்றவர்களுக்கும்‌ 12-ஆம்‌ வகுப்புக்கு இணையான கல்விச்‌ சான்றிதழும்‌ பள்ளிக்கல்வித்‌ துறை மூலமாக வழங்கப்படும்‌.”