TRB Polytechnic selection List Published June last or July First 


2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான 1060௦ விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.14,2019, நாள். 27:11.2019 டவளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கணினி வழித் தேர்வுகள் (CBT) ௦8.12.2021 முதல் 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வர்களின் மதிப்பெண்கள் 08.03.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில், பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தசூதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை / ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 11.03.2022 முதல் 01.04.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் சான்றிதழ்களை / ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு பணிநாடுநர்களிடமிருந்து 11.03.2022 முதல் 04.04.2022 வரை 17,383 கோரிக்கை மனுக்கள் வரப்பபற்றன. அவ்வாறு வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் கீழ்க்காணும் 8தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டன.

1. Login / Password -2520 

2. Character and Conduct -1390 

3. Work Experience Certificate -3591 

4. Equivalence Subject -7669 

5. Educational Qualifications and Additional Educational Qualifications- 1349 

6. Key Challenge -120 

7. Petition without clarity -114 

8. Others -630 

Total 17,383


மேற்கண்ட கோரிக்கை மனுக்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குழுக் கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கோரிக்கை மனுக்களுக்குறிய பதில்கள் அளிக்கப்படுகிறது





சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இரு கட்டங்களாக நடைபெறும். முதற்கட்ட சரிபார்ப்பில் ஆவணங்களுடன் பணிநாடுநர்கள் தெரிவித்துள்ள விவரங்களுடன் சரிபார்க்கப்பட்டு அறிவிக்கையின்பம தெரிவானவர்கள், நிராகரிக்கப்பட் டவர்களின் பட்டியல் வலைதளத்தில் ஜூன் மாதத்தில் வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேல்முறையீடுகள் முடிவு செய்த உடன் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிநாடுநர்கள் முன்னிலையில் அசல் சான்றிதழ்களுடன் நடத்தப்பட்டு ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் தற்காலிக தெரிவர்களின் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து விவரங்களும் வெளிப்படையாக வலைதளத்தின் மூலமாகவும், செய்திக் குறிப்பின் வாயலாகவும் தெரிவிக்கப்படும். தெரிவு நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும் என்று அனைத்து பணிநாடுநர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இத்தெரிவிற்கு நேர்முகத் தேர்வு இல்லை என்பதும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகின்றது. என ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது