ஊஞ்சல்‌, தேன்சிட்டு,கனவு ஆசிரியர்‌  இதழ்‌  அரசாணை Go No 108 Date 22 06 2022


பள்ளிக்‌ கல்வி - 2022.2023-ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கை அறிவிப்பு - தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழிகளில்‌ தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல்‌ இதழ்‌, உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர்‌ மாத இதழ்‌ வெளியிடுதல்‌ - ஆணை .


பள்ளிக்‌ கல்வித்‌துறை அரசாணை நிலை எண்‌:108 நாள்‌ 22.06.2022 Pdf 


படைப்புத்‌ திறன்களை வெளிப்படுத்தும்‌ வகையிலும்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழிகளில்‌ தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல்‌ இதழும்‌, உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும்‌ மாதமிருமுறை வெளியிடப்படும்‌. மேலும்‌, ஆசிரியர்களுக்கான படைப்புத்‌ தளத்தை உருவாக்கவும்‌ சிறந்த கற்றல்‌ கற்பித்தல்‌ முறைகளைப்‌ பரிமாறிக்‌ கொள்ளவும்‌ கனவு ஆசிரியர்‌ என்ற மாதஇதழ்‌ வெளியிடப்படும்‌. சுமார்‌ ரூ.7 கோடி மதிப்பிட்டில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌

ஊஞ்சல்‌ இதழ் ,தேன்சிட்டு இதழ் 

இந்த இதழ்களில்‌ தேசிய, மாநில செய்திகள்‌ மட்டுமன்றி அந்தந்த மாவட்டச்‌ செய்திகளும்‌ மாவட்டத்திலுள்ள மாணவர்களின்‌ படைப்புகளும்‌ இடம்‌ பெறும்‌.

கனவு ஆசிரியர்‌ மாதஇதழ்‌

ஆசிரியர்களின்‌ படைப்பாற்றலைப்‌ போற்றிப்‌ பாராட்டவும்‌, அங்கீகரிக்கவும்‌, ஆவணப்படுத்தவும்‌, கனவு ஆசிரியர்‌ என்ற மாத இதழ்‌ வெளியிடப்படும்‌.


இதழ்கள்‌ அனைத்து வகையான அரசுப்‌ பள்ளிகளிலும்‌ அனைத்து வகுப்பறைகளுக்கும்‌ தலா ஒரு பிரதி விதம்‌ ஆண்டு விடுமுறை, பருவ விடுமுறை நீங்கலாக மாதமிரு முறை என ஒரு கல்வியாண்டிற்கு (ஊஞ்சல்‌ மற்றும்‌ தேன்சிட்டு) தலா 20 இதழ்களையும்‌ ஆசிரியர்களுக்கான மாத இதழை ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 இதழ்கள்‌ என தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகத்தின்‌ வாயிலாக வெளியிடப்படும்.