Radhakrishnan Award Gudielines  2021-22


பள்ளிக்‌ கல்வி - டாக்டர்‌ இராதாகிருஷ்ணன்‌ விருது - 2021-22 ஆம்‌ கல்வியாண்டிற்கு ஆசிரியர்களைத்‌ தேர்வு செய்வதற்கான நடைமுறைகள்‌ மற்றும்‌ நெறிமுறைகள்‌ -ஆணை வெளியிடப்படுகிறது.


அரசாணை (டி) எண்‌. 220 நாள்‌:05.08.2022 Pdf 


🔷️அனைத்துவகைஆசிரியர்களும்‌ குறைந்தபட்சம்‌ 5 வருடங்கள்‌ பணிபுரிந்திருக்க வேண்டும்‌.

🔷️மாநில பாடதிட்டத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசுப்‌ பள்ளிகள்/ஆதிதிராவிட /பழங்குடியினர்‌ நலல்துறை /பிற்பட்டோர்‌ நலத்துறை/ சமூக பாதுகாப்புத்‌ துறை நிதி உதவி பெறும்‌ பள்ளிகள்‌ /ஆங்கிலோ இந்திய பள்ளிகள்‌ மற்றும்‌ சுயநிதி /மெட்ரிக்‌ பள்ளிகள்‌ ஆகிய மேலாண்மைகளின்‌ கீழ்‌. செயல்படும்‌ தொடக்க : நடுநிலை : உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ அனைத்து வகை ஆசிரியர்களும்‌ விருதிற்குத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவார்கள்‌.

🔷️இவ்விருது வகுப்பறையில்‌ கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்‌. அலுவலகங்களில்‌ நிர்வாகப்‌பணி மேற்கொள்ளும்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பிக்ககூடாது.

🔷️கல்வியாண்டில்‌ செப்டம்பர்‌ 30ஆம்‌ தேதிக்கு முன்‌ வயது முதிர்வின்‌காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப்‌ பரிந்துரை செய்யக்கூடாது.ஆசிரியர்கள்‌ கல்வியாண்டில்‌ குறைந்தது 4 மாதங்கள்‌ (செப்டம்பர்‌30ஆம்‌ தேதிவரை - பணிபுரிந்தவராக இருத்தல்‌வேண்டும்‌. மறுநியமன காலத்தைக்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளக்கூடாது),

🔷️பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ எவ்விதக்‌ குற்றச்சாட்டிற்கும்‌,ஒழுங்கு நடவடிக்கைக்கும்‌ உட்படாதவராகவும்‌, பொதுவாழ்வில்‌தூய்மையானவராகவும்‌, பொது சேவைகளில்‌ நாட்டம்‌ கொண்டவராகவும்‌, பள்ளி மாணவர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைத்தல்‌, பள்ளி மாணவர்‌ சேர்க்கை, தேர்வில்‌ தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல்‌, கல்வித்தரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களின்‌ தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

🔷️அரசியலில்‌ பங்கு பெற்று அரசியல்‌ கட்சிகளுடன்‌ தொடர்புடைய ஆசிரியர்களின்‌ பெயர்கள்‌ கண்டிப்பாகப்‌ பரிந்துரைக்கப்படக்‌ கூடாது.

🔷️கல்வியினை வணிக ரீதியாகக்‌ கருதி செயல்படும்‌ ஆசிரியர்களையும்‌, நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும்‌ ஆசிரியர்களையும்‌ இவ்விருதிற்குத்‌ தகுதியற்றவர்களாகக்‌ கருதப்பட வேண்டும்‌.


🔷️சிறந்த முறையில்‌ பணிபுரியும்‌ தமிழாசிரியர்கள்‌ மற்றும்‌ சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌, கைத்தொழில்‌ ஆசிரியர்கள்‌, இசை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ ஆசிரியர்களில்‌ தகுதியானவர்களையும்‌ விருதிற்குப்‌ பரிந்துரைக்கும்‌ போது கவனத்தில்‌ கொள்ளவேண்டும்‌.