Tamil Talent Search Exam
Tamil Talent Search Exam Study Material -Download
G.O.NO 89 Date 14 .07.22 TAMIL TALENT EXAM Pdf -Download
Tamil talent search Exam 2022-CEO Insruction.pdf -Download
Tamil talent search Exam Application Form Pdf-Download
Tamil talent search Exam Question Pattern And Syllabus Pdf-Download
Tamil talent search Exam Postponed
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 01.10.2022 அன்று நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் இத்தேர்வு 15.10.2022 (சனிக்கிழமை) அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது
TTSE - Tamil talent search Exam Instruction
அரசாணை (நிலை) எண்89, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி நாள்.14.07.2022 அரசாணையின்படி தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திகொள்ளும் வகையில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 1.10.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில் தெரிவு செய்யப்படுவார்கள்.
Tamil talent search Exam Syllabus
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையிலுள்ள தமிழ்பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.
Tamil talent search Exam Question Pattern
மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்களாக அமையும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மேற்படி வினாக்கள் பத்தாம் வகுப்பு நிலையின் அடிப்படையில் அமையப்பெறும். இலக்கணம், அற இலக்கியம், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்தல், பொருத்துக, பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்தல், சரியான/தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல், கூற்று/காரணம் வினாக்கள் போன்ற வினாக்கள் கேட்கப்படும்.
Tamil talent search Exam FEES
தேர்வு கட்டணம் ரூ.50/-
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..