LKG, UKG Temporary Teachers Appointment in Rs.5000 Go No 164 Date 29.09.22
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் எனவும், அந்த பள்ளிகளுக்கு தேவையான சிறப்பு ஆசிரியர்கள் தேவையை முன்னுரிமையாக கொண்டு தற்காலிக சிறப்பாசிரியர்களை நியமிக்கவும், அவர்களை தெரிவு செய்யப்படும் முறை மற்றும் அவர்களுக்கான பணிகள் தொடர்பான அரசாணை தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது
Temporary Teachers Appointment in Rs.5000 Go No 164 Date 29.09.22 -Download
அதன் படி இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் படிப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம்.
இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது .
சிறப்பாசிரியர்கள் LKG மற்றும் UKG இரு வகுப்புகளை ஒரூ சேர கையாள வேண்டும்.
இந்த சிறப்பாசிரியர்களுக்கு மேலாண்மைக்குழு மூலம் மாதம் ரூ 5000 வழங்கப்படும்
இச்சிறப்பாசிரியர்க ஒரு கல்வி ஆண்டிற்கு ஜுன் முதல் ஏப்ரல் மாதங்கள் வரை மட்டுமே பணிக்காலம் ஆகும்.
இச்சிறப்பாசிரியர்கள் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..