8.10.22. நடைபெற இருந்த CRC கூட்டம் 15.10.22 அன்று நடைபெறும் என SCERT அவர்கள் இயக்குனர் உத்தரவு

 மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர்‌ ஆசிரியர்‌ பயிற்சிகள்‌ 2022. 2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடத்த திட்டமிடப்படுகிறது.

இதனைத்‌ தொடர்ந்து 08.10.2022 அன்று கால அட்டவணைப்படி நடைபெற இருந்த வட்டார வளமைய கலந்தாலோசனைக்‌  கூட்டம்‌ வருகின்ற 15.20.2022 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில்‌ 6 முதல்‌ 1௦ ஆம்‌ வகுப்பு (2 தமிழ்‌, 2. ஆங்கிலம்‌, 3. கணக்கு, 4. அறிவியல்‌, 5. சமூக அறிவியல்‌), 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு 1 தமிழ்‌, 2. ஆங்கிலம்‌, 3.இயற்பியல்‌, 4.வேதியியல்‌, 5. உயிரியல்‌, 6. கணிதவியல்‌, 7. வரலாறு மற்றும்‌ புவியியல்‌, 8. பொருளியல்‌, 9. வணிகவியல்‌ மற்றும்‌ கணக்கு பதிவியல்‌, 10. கணிணி அறிவியல்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு நடத்தப்படும்‌ என தெரிவிக்கலாகிறது.

எனவே, வருகின்ற 15.10.2022 அன்று நடைபெறவுள்ள வட்டார -வளமைய கலந்தாலோசனைக்‌ கூட்டத்திற்கு 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மேற்குறிப்பிட்ட பாடங்களை கற்பிக்கும்‌ ஆசிரியர்களை தெரிவு செய்யப்பட்ட கலந்தாலோசனை கூட்டத்தில்‌ கலந்து கொள்ளவேண்டும்