Children Movie  For TN School Education| சிறார்‌ திரைப்படங்கள்‌

பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள்!!!

Children Movie CoSE Proceeding Date 10.1.23 Pdf Download 

2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ திரையிட வேண்டிய சிறார்‌ திரைப்படங்கள்‌ 

ஜனவரி மாதம்.

மார்டன்‌ டைம்ஸ்‌! திரைப்படம்‌ -Download  Link

மார்டன்‌ டைம்ஸ்‌! கதை சுருக்கம் -Click Here

 

ஒவ்வாரு மாதமும்‌ அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலை பள்ளிகளில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில்‌ இம்மாதம்‌ ஜனவரி 11 முதல்‌ 13 வரை "மார்டன்‌ டைம்ஸ்‌! திரைப்படம்‌ திரையிடத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்‌ படத்தின்‌. சுருக்கம்‌ இச்சுற்றறிக்கையுடன்‌ இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கட்டுரை, தேன்சிட்டு இதழிலும்‌ வெளிவந்துள்ளது

திரையிடலுக்கு முன்‌:

🔵பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டும்‌ திரையிடுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

🔵பதிவிறக்கம்‌ செய்வதில்‌ சிக்கல்‌ இருந்தால்‌ பள்ளியுடன்‌ இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும்‌.

🔵பொறுப்பு ஆசிரியர்‌ திரைப்படம்‌ திரையிடும்‌ நாளுக்கு முன்‌ படத்தைப்‌ பார்க்க வேண்டும்‌ கதை சுருக்கத்தைப்‌ படித்து, படத்தின்‌ கதைக்களத்தை வெளிப்படுத்தாமல்‌ குழந்தைகளுக்கு அடிப்படை பின்னணியைக்‌ கொடுக்க வேண்டும்‌.

🔵வகுப்பறையைத்‌ திரையிடலுக்கு தயார்‌ செய்ய வேண்டும்‌. வகுப்பறையில்‌ வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும்‌ போதுமான காற்று வசதி உள்ளதையும்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

🔵மின்‌ இணைப்புகள்‌ பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌. நிகழ்ச்சியின்‌ போது வகுப்பறையில்‌ போதுமான குடிநீர்‌ வசதி இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

🔵வகுப்பறையில்‌ திரைப்படக்காட்டி (Projector) இல்லாத பள்ளிகளில்‌, பள்ளிமேலாண்மைக்‌ குழுக்கள்‌ (SMC) வாயிலாக வாடகைக்கு பெற்று திரையிடவேண்டும்‌.

🔵திரையிடலுக்கு ஒரு சுவரைப்‌ பயன்படுத்தினால்‌ அது தெளிவான வெள்ளை சுவராக இருக்க வேண்டும்‌.


திரையிட்ட பின்‌:

◼️மாணவர்கள்‌ ஒரு குழுவாக அல்லது தனி நபராக திரைப்படத்தைச்‌ சுற்றி ஒரு செயல்பாடு செய்யலாம்‌.

◼️படத்தில்‌ இருந்து ஒரு காட்சியை உருவாக்குதல்‌

◼️படத்தில்‌ நடிக்கும்‌ நடிகர்களைப்‌ போலவே நடிப்பது

◼️கதாபாத்திரங்கள்‌ தமிழில்‌ பேசக்கூடியது போல்‌ உருவாக்குதல்‌

◼️சில குறிப்பிட்ட காட்சிகளைப்‌ பற்றி விவாதித்தல்‌

◼️இத்திரைப்படத்திற்கு வித்தியாசமான கதையை எழுத முடியுமா? அது வேறு ஒரு தொடக்கத்தையும்‌ வேறு முடிவையும்‌ கொண்டுருக்கும்‌.

◼️இத்திரைப்படத்தை ஒரு நாடகமாக உருவாக்க முடியுமா? ஆம்‌ எனில்‌, குழுக்களாக உருவாக்க அவர்களை ஊக்குவிக்கவும்‌.

◼️பள்ளி போட்டிகள்‌ நடத்தி , வட்டார, மாவட்ட மற்றும்‌ மாநில அளவிலான போட்டிகளில்  பங்கு பெற வைக்க வேண்டும்.