10Th Science Practical exam 2023 


தமிழக அரசு, 2011-12 ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ புதிய பொதுப்‌ பாடத்திட்டத்தினை (சமச்சீர்கல்வி) அறிமுகப்படுத்தி உள்ளதால்‌, மார்ச்‌ 2012 முதல்‌ அறிவியல்‌ பாடத்தில்‌ செய்முறைத்‌ தேர்வு கட்டயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல்‌ பாடத்தில்‌ கருத்தியல்‌ தேர்விற்கு 75 மதிப்பெண்களும்‌ செய்முறைத்‌ தேர்விற்கு 25 மதிப்பெண்களும்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

அறிவியல்‌ பாடத்தில்‌ செய்முறைத்‌ தேர்விற்கு 2 மணி நேரம்‌ செய்முறைத்‌ தேர்வு காலை 9.00 மணி முதல்‌ 11.00 மணி வரையும்‌, பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை இரு வேளையில்‌ நடத்தப்பட வேண்டும்‌.

10Th Science Practical exam 2023  Exam Date

  • 20.03.2023- To 28.03.2023

SSLC APRIL 2023 - SCIENCE PRACTICAL - INSTRUCTION Pdf Download 




இயற்பியல்‌ - ஒரு வினா - 5 மதிப்பெண்‌

வேதியியல்‌ - ஒரு வினா - 5 மதிப்பெண்‌

- 2 வினா - மொத்தம்‌ 10 மதிப்பெண்கள்‌

உயிர்‌ அறிவியலில்‌:

தாவரவியல்‌ - ஒரு வினா - 5 மதிப்பெண்‌

விலங்கியல்‌ - ஒரு வினா - 5 மதிப்பெண்‌

- 2 வினா - மொத்தம்‌ 10 மதிப்பெண்கள்‌

எனவே மொத்தம்‌ 20 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டும்‌.


அகமதிப்பிடு:

மாணவர்கள்‌ ஆய்வுக்கூட வருகை - 1 மதிப்பெண்‌

மாணவர்‌ ஆய்வக செயல்திறன்‌ - 1 மதிப்பெண்‌

மாணவர்‌ ஆய்வக ஈடுபாடு - 1 மதிப்பெண்‌

ஆய்வக பதிவுக்‌ குறிப்பேடு - 2 மதிப்பெண்கள்‌

மொத்தம்‌ - 5 மதிப்பெண்கள்‌

செய்முறைத்‌ தேர்வு 20.03.2023-ல்‌ தொடங்கி 28.03.2023-க்குள்‌ முடிக்கப்பட வேண்டும்‌.