Tamil Nadu Chief Minister Talent Search Exam | Tenth Talent Search Exam|தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு
10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு அறிமுகம்.
"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற புதிய திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.04.2023 அன்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு செய்தி வெளியீடு எண் : 651,652 நாள் : 05.04.2023 Pdf | Download
இப்புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பதினொன்றாம், பண்ணிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர்பயிற்சிகளும் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும்பொழுதும் ஒவ்வோர் ஆண்டும் ரூ12,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..