Exemption from Departmental Exam 


சிறப்பு மற்றும்‌ துறைத்‌ தேர்வுகளில்‌ தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தல்‌ சம்பந்தமாக - ஆணைகள்‌.


Departmental Exam Go No 41 Date 09.05.2023 - Download 


அரசுப்‌ பணியாளர்களின்‌ ஓய்வு பெறும்‌ வயது 59 மற்றும்‌ 6௦ ஆக உயர்த்தி ஆணைகள்‌ வெளியிட்டப்பட்டது . , சிறப்பு மற்றும்‌ துறைத்‌ தேர்வுகளில்‌  தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தக்‌ கோரும்‌ சலுகையிணை அடைய 53 வயதுக்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும்‌ என்பது அரசுப்‌ பணியாளர்களின்‌ ஓய்வு பெறும்‌ வயது 58 ஆக இருந்த போது நிர்ணயிக்கப்பட்டதாகும்‌. 


தற்போது அரசுப்‌ பணியாளர்களின்‌ ஓய்வு பெறும்‌ வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால்‌,  53 வயது என்று நிர்ணயித்துள்ளதை 55 வயதாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.


“சிறப்பு மற்றும்‌ துறைத்‌ தேர்வுகளில்‌ ஒரு அரசு அலுவலர்‌ தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க அவர்‌ பொருட்டு விதிகளைத்‌ தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகளை அவர்‌ பூர்த்தி செய்ய வேண்டும்‌.


1.சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்‌ 55 வயதிற்குக்‌ குறையாதவராக இருக்க வேண்டும்‌.

2.தொடர்புடைய அரசு அலுவலர்‌ தேர்வுகளில்‌ தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும்‌