Tamil Talent Search Exam 2023 | தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர்‌ 2023|TTSE 2023



 தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு நடத்தப்படுகிறது. 2023-2024-ஆம்‌ கல்வியாண்டிற்கான தமிழ்‌ மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது

 Tamil Talent Search Exam Original Question Paper and Answer Key2023 -Download 


Tamil Talent Search Exam 2023 DGE Press News -Download 

Tamil Talent Search Exam 2023 Application.pdf Downlod 

Tamil Talent Search Exam Question Paper And Answer Key  -Download 


TTSE - Tamil talent search Exam Instruction 

அரசாணை (நிலை) எண்‌89, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தி  நாள்‌.14.07.2022 அரசாணையின்படி தமிழ்மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திகொள்ளும்‌ வகையில்‌ 2023-2024ஆம்‌ கல்வியாண்டு  தமிழ்மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகை பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு 15.10.2023(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில்‌ 1500 மாணவர்கள்‌ தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வில்‌ 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும்‌ மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள்‌ உள்ளிட்ட பிற தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில்‌ தெரிவு செய்யப்படுவார்கள்‌.


Tamil talent search Exam Syllabus 

தமிழ்நாடு அரசின்‌ பத்தாம்‌ வகுப்பு தரநிலையிலுள்ள தமிழ்பாடத்திட்டங்களின்‌ அடிப்படையில்‌ கொள்குறி வகையில்‌ தேர்வு நடத்தப்படும்‌.


விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்

இணையதளம்‌ மூலம்‌ 05.09.2023 முதல்‌ 20.09.2023 வரை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ தேர்வுக்‌ கட்டணத்‌ தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌/ முதல்வரிடம்‌ ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌. 20.09.2023.