DGE - NMMS Uploading Instructions 2023 

தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ தகுதி படிப்புதவித்‌ தொகைத்‌ திட்டத்‌ தேர்வு  பிப்ரவரி 2024 - பள்ளி மாணவர்களின்‌ விவரங்கள்‌ ஆன்லைனில்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ - தொடர்பாக.அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌, அலுவலர்கள்‌ அவர்கள் அறிவுரைகள் 

தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம்‌ வகுப்பு பள்ளி மாணவர்களின்‌ விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்‌  இணையதளம்‌ வழியாக 08.12.2023 அன்று பிற்பகல்‌ முதல்‌ 22.12.2023 மாலை 06.00 மணி வரை பதிவேற்றம்‌ செய்யலாம்‌.


மாணவர்களின்‌ விவரங்களை பதிவேற்றம்‌  செய்யும்‌ போது நினைவில்‌ கொள்ள வேண்டிய விவரங்கள்‌.

DGE - NMMS Uploading Instructions 2023  in PdF Download 


NMMS தேர்வுக்கு மாணவர்கள்‌ சமர்ப்பித்த விண்ணப்பத்தின்‌ அடிப்படையில்‌ (மாணவரின்‌ பெயர்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ எவ்வாறு இடம்‌ பெற வேண்டுமோ அதன்படி)EMIS இணையதளத்தில்‌ திருத்தங்களை மேற்கொண்டு அதன்‌ பின்னர்‌ DGE Patrol ல்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

மாணவர்‌ பெயர்‌, தந்தை / பாதுகாவலர்‌ பெயர்‌, பிறந்த தேதி, பாலினம்‌, வகுப்பு, கைபேசி எண்‌ போன்ற விவரங்கள்‌ Emis இணையதளத்தில்‌ உள்ள விவரங்களுடன்‌ ஒத்திருக்க வேண்டும்‌.

மாணவரின்‌ பெற்றோர்‌ பயன்படுத்தும்‌ நடைமுறையில்‌ உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும்‌.

அக்கைபேசி எண்ணை குறைந்தது தொடரும்‌ ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல்‌ இருக்கவேண்டும்‌.

விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ காலம்‌: 08.12.2023 - 22.12.2023

விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய கடைசி நாள்‌ : 22.12.2023

online கட்டணம்‌ செலுத்த கடைசி நாள்‌. :22.12.2023.

Summary Report உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ . 27 12.2023