12Th Hsc 2024 Retotal, Scan Copy ,Apply  And Temporary Mark Sheet  Download  Instruction 2024 

மார்ச்‌ - 2024 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌ & மறுகூட்டல்‌ / விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பித்தல்‌ செய்திக்குறிப்பு

12Th Hsc 2024 Retotal, Scan Copy ,Apply And Temporary Mark Sheet Download Instruction 2024  In Pdf Download 




1.மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌:

 A) 09.05.2024 முதல்‌ மார்ச்‌ - 2024 பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌  பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள்‌ வழியாக மதிப்பெண்‌ பட்டியலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌ 

அல்லது 

தங்களது பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை அளித்து   www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

B)தனித்தேர்வர்கள்‌ தங்களது பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை அளித்து  என்ற www.dge.tn.nic.in இணையதளத்தில்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

2.விடைத்தாள்‌ நகல்‌ /மறுகூட்டல்‌ விண்ணப்பிக்கும்‌ முறை:

A]பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாக 07.05.2024 (செவ்வாய்க்கிழமை)காலை 11.00 மணி முதல்‌ 11.05.2024 ( சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌

B]தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌
தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாக 
07.05.2024 (செவ்வாய்க்கிழமை)காலை 11.00 மணி முதல்‌ 11.05.2024 ( சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌

குறிப்பு:
  1. விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ ஆகியவற்றில்‌ ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள்‌ விண்ணப்பிக்க இயலும்‌.
  2. விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ மட்டுமே விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி பின்னர்‌ விண்ணப்பிக்க இயலும்‌.
விடைத்தாளின்‌ நகல்‌ பெறுவதற்கான கட்டணம்‌ :

  • ஒவ்வொரு பாடத்திற்கும்‌ - ரூ.275:

மறுகூட்டல்‌கட்டணம்‌

  • உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ - ரூ.305
  • ஏனையப்‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205-
பணம்‌ செலுத்தும்‌ முறை :

தேர்வர்கள்‌ விடைத்தாள்களின்‌ நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள
பள்ளியிலேயே பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.