ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆசிரியர்கள் வேலை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட கூடாது என கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்தான் கல்வியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும். நீட் தேர்வு மட்டுமின்றி அனைத்து வகை போட்டி தேர்வுகளுக்கும் சிறந்த கல்வியாளர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வில் இந்த வருடம் தீவிர பயிற்சி மூலம் 48.57 சதவீத மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வு மையங்கள் தொடங்கப்படும். கல்வி முறை இங்கும் கொண்டு வர முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பவர்கள். வேலை நாட்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பது எனது நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.





Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here