1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்கு பின்னர் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

அமாவாசை நாளன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால் நாளை நடைபெறும் கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை, சந்திரன் முழுவதும் மறைத்து 2 நிமிடங்கள் 40 விநாடிகளுக்கு மேல் நீடிக்கும். இந்த நிகழ்வு அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பாதியாக தெரியும் என தெரிகிறது.

சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறுங்கண்ணால் பார்க்கக் கூடாது எனவும் அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது. 99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை அமெரிக்க விஞ்ஞானிகள் பறாக்கவிட்டுள்ளனர். முதல் முறையாக இந்தக் காட்சி ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதேபோன்ற முழு சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி ஏற்படவுள்ளது