குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த, மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அல்சர் என்று அழைக்கப்படும் குடல்புண், மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

கலிபோர்னியா மற்றும் சான்டிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குடல் புண்களை குணப்படுத்தக்கூடிய சிறிய ரக ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை விடவும் அரை மடங்கு பருமன் உடையவை. இந்த ரோபோக்கள் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மருந்தினை செலுத்தினால் குடற்புண் தாக்கம் குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சோதனை முயற்சியாக எலிகளில் இந்த ரோபோக்களை பயன்படுத்தியுள்ளனர்.