கூகுளின் குரல் தேடல் செயலியில் தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளை அந்நிறுவனம் இணைத்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரல் மூலம் கட்டளையிட்டு எழுத்துக்களைப் பெறுவதையே பெரிதும் விரும்புகின்றனர். தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரல்வழி தேடல் 3 மடங்கு வேகமாக நிகழ்வதாக கூகுள் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இணையதளத்தில் ஏதேனும் ஒரு தகவலை தேட வேண்டுமென்றால் எழுத்து வடிவிலோ அல்லது குரல்வழியிலோ கூகுள் தேடுபொறி மூலம் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை சேர்த்துள்ளது