நிகழ்வுகள்

1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டான்.
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1800 – மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
1839 – முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது.
1880 ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1881 – மிச்சிகனில் இடம்பெற்ற தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
1882 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
1887 – இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்ஷயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா போரில் தனது நடுநிலையை அறிவித்தது.
1961 – அணிசேரா நாடுகளின் முத்லாவது மாநாடு பெல்கிறேட்டில் இடம்பெற்றது.
1969 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ லெப். வில்லியம் கலி 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
1972 – ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1977 – வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1978 – காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இஸ்ரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1986 – அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
1990 – மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1872 – வ. உ. சிதம்பரம் பிள்ளை, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1938)
1888 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1975)
1945 – மு. மேத்தா, கவிஞர்
1950 – வீரசிங்கம் துருவசங்கரி, இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் (இ. 2006)

இறப்புகள்

1997 – அன்னை தெரேசா, (பி 1910)

சிறப்பு நாள்

இந்தியா – ஆசிரியர் நாள்