பத்தாம் வகுப்பு, உடனடி துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று(செப்.,8) முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 28 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆன் - லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தேர்வில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அனைத்து பாடங்களின் மதிப்பெண் அடங்கிய, ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும், அசல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படும். இந்த சான்றிதழ்களை, இன்று முதல், தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது