செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்ப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட பல விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதேபோல, செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அப்படி இணைக்கபடாத சிம் கார்டுகள் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 2018 பிப்ரவரியில் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.