சென்னை: அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க கூறிய உத்தரவுக்கு செப்.5-ம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க நீதிபதி துரைசாமி பரிந்துரைத்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை வாகன ஓட்டுனர்கள் தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முன்னதாக அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தமிழக அரசின் உத்தரவு மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் வாகனம் ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். சோதனையின் போது அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்ட கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார்களா என சோதனை நடைபெறவில்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்டகப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..