சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து, சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் பூமிக்கு திரும்பியுள்ளார்.


பெக்கி வில்சனுடன் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஜாக் ஃபிஷர் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் ஃப்யூடோர் யூர்சிகின் ஆகியோரும் பயணித்தனர். மூவரும் திட்டமிட்டபடி மத்திய கஜகஸ்தானின் புல்வெளி நிலப்பரப்பில் தரையிறங்கினார்.
இதுவரை 665-க்கும் அதிகமான நாட்களை விண்வெளி மையத்தில் கழித்த பெக்கி விட்சன் மூன்று முறை புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்துள்ளார்.

விண்வெளியில் நீண்ட நாட்கள் கழித்த பெண் விண்வெளி வீரர் மற்றும் முதல் அமெரிக்கர் என்ற சிறப்பை பெறுகிறார் பெக்கி வில்சன்.
2002ஆம் ஆண்டு தனது முதன் விண்வெளி பயணத்தையும், 2007-ஆம் ஆண்டு தனது இரண்டாவது விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார் பெக்கி வில்சன் .
பெக்கியின் இந்த விண்வெளி பயணத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்திய முதல் பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார்.