இணையதளப் பதிவு -tnschools.gov.in -click here
நீட் தேர்வு உள்பட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 412 பயிற்சி மையங்களை அரசு அமைத்துள்ளது. இந்த மையத்தில் மாணவர்கள் சேருவதற்கான இணையதள பதிவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.
இது குறித்த விவரம்:- கடந்த 2017-2018-ஆம் நிதியாண்டு பள்ளிக் கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
வளர்ந்து வரும் கல்விச்சூழலில் தமிழக மாணவர்களை அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஏதுவாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு மையம் என்கிற எண்ணிக்கையில் 412 மையங்களை ஏற்படுத்த அறிவிக்கப்பட்டது.
பள்ளிகள் மூலமாக மட்டுமே பதிவு...: அதன் தொடர்ச்சியாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகtnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வதற்கான திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் திங்கள்கிழமை (அக்.16) தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இணையதளப் பதிவுக்கான பணிகள் வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் 31 பேருக்கு காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு அளித்து அதற்கான ஆணையையும் அமைச்சர் வழங்கினார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..