விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் 'டிசி4' என்ற விண்கல், பூமி மீது மோதாமல் நூலிழையில் கடந்து சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 38,500 கி.மீ. தொலைவில் டிசி4 விண்கல் கடந்து சென்றதால், பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இதே விண்கல், தனது சுற்றுவட்டப் பாதையில், 2079ம் ஆண்டு நிச்சயம் பூமியைத் தாக்கும் என்றும் கணித்துள்ளனர்.
முன்னதாக இந்த விண்கல், அடுத்து 2050ம் ஆண்டில் பூமியை எதிர்கொண்டாலும்,
பூமியுடன் மோத வாய்ப்பில்லை என்பதும் சற்று ஆறுதலான விஷயமாகவே உள்ளது.
டிசி4 விண்கல் பற்றி:
சுமார் 15 முதல் 30 மீட்டர் வரை அகலம் கொண்ட விண்கல் ஒன்று, விண்வெளியில் சுற்றிவருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
சுமார் 15 முதல் 30 மீட்டர் வரை அகலம் கொண்ட விண்கல் ஒன்று, விண்வெளியில் சுற்றிவருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
டிசி4 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல், 2012-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம், 12-ஆம் தேதி அன்டார்டிகா கண்டத்துக்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது.
இந்த நிலையில், அந்த விண்கல் மீண்டும் 2017-ஆம் ஆண்டு பூமியை நெருங்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் அப்போதே கணித்துக் கூறியிருந்தனர்.
அதன்படி, டிசி4 விண்கல் பூமியை வியாழக்கிழமை
(அக். 12) மிக நெருக்கத்தில் கடந்து சென்றது. எனினும், 38,500 கி.மீ. தொலைவிலேயே அந்த விண்கல் பூமியைக் கடந்துவிட்டதால், அது பூமியுடன் மோதும் ஆபத்து ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும், விண்கற்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும் சூழலில், அதனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் மற்றும் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இந்த டிசி4 விண்கல்லின் வருகை உதவும் என்று கூறப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..