இந்த நிகழ்ச்சி குறித்த முழு விவரங்களை https://scienceindiafest.org/ என்ற இணையதளத்தில் பார்த்து பயன்பெறுங்கள்.


சென்னை : மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக நடத்தப்படும் சர்வதேச அறிவியல் திருவிழா முதன்முறையாக சென்னையில் நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்த திருவிழா அறிவியல் வளர்ச்சிக்கான தூண்டுகோலாக அமைந்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. எனினும் வானிலை மாற்றம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் சவால்களை சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் களமாக 2015ம் ஆண்டு முதல் மத்திய அரசின் சார்பில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப கோட்பாட்டாளர்கள் தங்களது நுட்ப அறிவு மற்றும் கருத்துகளை பரிமாற்றி கொள்ள இந்தத் திருவிழா உதவுகிறது. இதே போன்று ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, உள்ளிட்டவை குறித்து இதில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுகின்றன.


முதன்முறையாக சென்னையில்  சென்னையில் அறிவியல் திருவிழா
கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் நடைபெற்று வரும் இந்த இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா இந்த ஆண்டு முதன்முறையாக சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கி அக்டோபர் 16ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம், சிஎல்ஆர்ஐ, தேசிய கடல் ஆராய்ச்சி மையம், ஐஐடி சென்னை உள்ளிட்ட இடங்களில் இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டல் வள ஆராய்ச்சி 
கடல்வள ஆராய்ச்சி கருத்தரங்கம்
அறிவியல் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று பெருங்கடல் அறிவியல், மற்றும் கடல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், கடல் வள ஆராய்ச்சி மேம்படுத்துவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன.

பகிரும் களம் 
ஆக்கப்பூர்வமான விவாதம்
அறிவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரை எழுதுதல், அறிவார்ந்த சொத்துகளை பாதுகாத்தல், இளம் விஞ்ஞானிகளுக்கான அரசாங்க கொள்கைகள் போன்ற தலைப்பில் பயிலரங்கங்களும் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்கும், இளம் விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞான பங்களிப்புகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.

பெண்களுக்கும் வாய்ப்பு 
கலைநிகழ்ச்சிகள்
அறிவியல் தொடர்பான விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்களிடம் அறிவியல் மற்றும் தொழில்முணைவோர் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்த முழு விவரங்களை https://scienceindiafest.org/ என்ற இணையதளத்தில் பார்த்து பயன்பெறுங்கள்.