தீபாவளிக்கு கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியல்படி வரும் செவ்வாய் ,புதன் ஆகிய இரு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது .
ஆனால் தீபாவளிப்பண்டிகை தமிழகத்தில் புதன் வியாழன் ஆகிய நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. அதாவது புதன் 18 தீபாவளி,மற்றும் வியாழன் 19 தீபாவளி கேதாரீஸ்வரர் நோன்புஆகும்.எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாற்றி அறிவிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலர் திரு செல்வராஜு கோரிக்கை விடுத்தார்.

  இது குறித்து பரிசீலனை செய்வதாக பதிலளித்தநிலையில் நேற்று மீண்டும் இயக்குனரை தொடர்புகொண்ட போது,இதுகுறித்து இணை இயக்குனர் அவர்களிடம் விவரமறிய கோரினார்.உடன் இணை இயக்குனர் அவர்களிடம் தொடர்பு கொண்டதில்  ஏற்கனவே அறிவித்தபடி பள்ளிக்கல்வித்துறை கடைபிடிக்க இருப்பதால் , தொடக்கக்கல்வித்துறையில் விடுமுறை மாற்றம்  செய்ய இயலாது என்றும், அறிவிக்கப்பட்டபடியே விடுமுறைநாட்களில் மாற் இல்லை என்றும் , வியாழன் அன்று விடுமுறை தேவைப்படுவோர் உள்ளூர் விடுமுறை அதாவது ஈடுசெய் விடுமுறைக்கு  உதவித்தொடக்கல்வி அலுவலருக்கு விண்ணப்ப்பித்து பெறலாம் என்றும் இது குறித்தான தகவல்மாவட்டதொடக்கக்ல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து உதவித்தொடக்ககல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.