சென்னை: அரசு பள்ளி மாணவர்கள், ’நீட்’ பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.பிளஸ் ௨ முடித்த மாணவர்கள், உயர் கல்வியில் சேர, மத்திய அரசு, பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துகிறது. இவற்றில், மருத்துவத்துக்கான, நீட்; இன்ஜினியரிங்குக்கான, ஜே.இ.இ., ஆகிய தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் போன்ற, மாநில பாடத்திட்ட மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.இந்நிலையில், நீட், ஜே.இ.இ., தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதன்படி, ’ஸ்பீட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 20 கோடி ரூபாய் செலவில், ’நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், அக்., 26 வரை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், ’ஆன் - லைன்’ பதிவு அவகாசத்தை, அக்., 31 வரை நீட்டித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு-

Tags
NEET
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..