யோகாசன ஆசிரியர் இலவச பயிற்சி
திருப்பரங்குன்றம்: யோகாசன ஆசிரியர் ஆக விருப்பமுள்ளவர்களுக்கு உணவு, தங்குமிடத்துடன், பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது.தமிழ்நாடு யோகாசன சங்க பொதுச் செயலாளர் யோகி ராமலிங்கம் கூறியதாவது: எங்கள் சங்கமும் உல சமாதான ஆலய குரு மகான் பரஞ்ஜோதியார் இணைந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் யோகாசன ஆசிரியர்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு நுாறு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அவர்களுக்கு திருமூர்த்தி மலையிலுள்ள பரஞ்ஜோதி யோகா கல்லுாரியில் ஒரு ஆண்டு பட்டயப்படிப்பு பயிற்சி அளிக்கப்படும். தேர்வானவர்களுக்கு பயிற்சி, உணவு, தங்குமிடம், உடைகள் இலவசம்.ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பெண்களுக்கு தனி விடுதி வசதி உண்டு. பயற்சி முடித்தவர்களுக்கு கல்லுாரி மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள பிளஸ் 2, டிகிரி முடித்தவர்கள் தனக்கன்குளம் யோகா நகரிலுள்ள தமிழ்நாடு யோகாசன சங்கத்திற்கு நேரில் வரலாம். விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..