திருச்சிபள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்த திட்டம் தற்போது முதல்வர் பழனிசாமியின் பரிசீலனையில் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டுடன் மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டமும் கொண்டு வரப்படும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்