குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு இதுவரை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4, விஏஓ ஆகிய இரண்டு தேர்வுகளும் இணைத்து ஒரே தேர்வாக இந்த முறை நடத்தப்படுகிறது. பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இந்தத் தேர்வுக்கு கடந்த 13ஆம் தேதி நல்லிரவு வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டிசம்பர் 13ஆம் தேதி அன்று மட்டுமே சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இருப்பினும் அன்றைய தினம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தளங்கள் சில மணிநேரம் முடங்கியதால் பலரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேர்வாணையம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.