குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாளை வரை குரூப்-4 தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தலாம்.

தமிழகத்தில், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 9351 குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி11-ம் தேதி நடைபெறுகிறது. இன்று இரவு 11.59 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுக் கட்டணத்தை நாளை வரை செலுத்தலாம். 9351 பணியிடங்களுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.