ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட்
இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று பொது விநியோகத் துறை உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க `ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.
இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொது விநியோகப் பொருட்கள் வழங்க வேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு பொது விநியோகத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை பெற முடியும். என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர். எனவே ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமும், பொது விநியோகத் துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று (டிசம்பர் 08) தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது எனவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன் டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் கொடுத்து முடிக்கப்படும் எனவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..